Monday 25 April 2016

ADMK Banner Case



 ADMK banner case by Satta Panchayat, coming up for hearing today in Chief Justice Court (item#14). அதிமுக பொதுக்குழுவிற்காக(31-12-2015) நடைபாதையை மறித்து பேனர் வைத்து, மக்களை சாலையில் நடக்கவிட்டது தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கமும், டிராபிக் ராமசாமியும் தொடுத்திருந்த பொதுநல வழக்கு இன்று தலைமை நீதிபதி முன்பாக மீண்டும் விசாரணைக்கு வருகிறது(வரிசை எண்:14).

சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்(affidavit) 350பேனர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது என்று பொத்தாம் பொதுவான தகவல் உள்ளதே தவிர எந்த இடத்தில் இந்த 350 பேனர்களும் வைக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. ( இவர்கள் வைத்தது 350 அல்ல 3500 பேனர்களுக்கு மேல் என்பது வேறு விஷயம்).
எனவே, இன்றைய விசாரணையின்போதுபேனர் வைக்கப்பட்ட இடம்”, ”அனுமதியளிக்கப்பட்ட இடத்தில்தான் பேனர் வைக்கப்பட்டது என்பதற்கு ஆதரமான புகைப்படங்கள்போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்யவேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம்.

வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும், ஆளுங்கட்சி செய்யும் அட்டூழியங்களை மக்களின் சார்பாக தட்டிக்கேட்கும் சமூகக் கடமையை சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடர்ந்து செய்யும்..!!
குறிப்பு: சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்களின் உதவி, பொதுமக்கள்-குறிப்பாக இளைஞர்களின் பங்கேற்பு இருந்தால் இன்னும் வலுவாகப் போராட முடியும்.
 
தொடர்புக்கு: sattapanchayat@gmail.com

No comments:

Post a Comment