Monday 25 April 2016

State Information Commission - Siva Elango arrest case

இன்று “16வது முறையாக !!” சட்ட பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ( தகவல் ஆணையத்தில் விசாரணையின்போது உட்காரும் உரிமை கோரியதற்காக இளங்கோ கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வழக்கு)

இளங்கோ,நான், ஜெய்கணேஷ் மூவரும் நீதிமன்றம் சென்றிருந்தோம். 10:30 மணிக்கு ஆஜராகிய நாங்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது மணி மதியம் 1:15. தன் வழக்கிற்காக தானே வாதாடிவரும்(Party-in-Person) இளங்கோ, இன்றைய விசாரணையின்போது தகவல் ஆணைய செயலாளரை குறுக்கு விசாரணை செய்தார்(30 நிமிடங்கள்).

கடந்த ஆண்டு ஜனவரியில் போடப்பட்ட வழக்கு 16 மாதங்களாக நடந்துகொண்டிருக்கிறது !! சாதாரண இந்த வழக்கே இப்படி வருடக்கணக்கில் இழுத்துச் செல்லுவதைப் கண்கூடாகப் பார்க்கும்போது, நீதித்துறையில் போர்க்கால அடிப்படையில் மாற்றங்கள் வரவேண்டியதின் அவசியத்தை தீவிரமாக உணரமுடிந்தது. ஒரு எளிய வழக்கு எப்படியெல்லாம் ஜவ்வாக இழுத்துச்செல்லும் என்பதை ஆதாரப்பூர்வமாக தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறோம். வழக்கு முடிவுக்கு வரும்போது இதுகுறித்த விவரங்களை முழுமையாக வெளியிடுகிறோம். தற்போதைக்கு இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. (18 வருடங்களாக நடைபெற்றுவரும் வழக்குகளையும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆகவே, இதெல்லாம் சாதாரணம் என்று நீங்கள் நினைப்பதில் தவறில்லை..!!)

நீதிமன்ற தாமதத்தால் சொத்துக்களை இழந்தவர்கள், சொந்தங்களை இழந்தவர்கள், சிறையில் வாழ்வைத் தொலைத்தவர்களின் கண்ணீரின் சில துளிகளே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மூலம் வெளிப்பட்டது என்றால் மிகையில்லை..!!

நீதி தாமதிக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீர் வடித்த தலைமை நீதிபதியின் கடமை உணர்விற்கு, மக்கள் மீதான அக்கறைக்கு ஒரு சல்யூட்..!!

No comments:

Post a Comment